2019-20 கடைசி காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.1 விழுக்காட்டிலிருந்து 3.1 விழுக்காடாக குறைந்துள்ளது. கரோனா வைரஸ் நோயின் தாக்கம் காரணமாக வளர்ச்சி குறைந்துள்ளதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டின் கடைசி கட்டமான மார்ச் மாதத்தில்தான் கரோனாவின் தாக்கம் அதிகரித்ததாகவும் ஆட்சி அமைத்ததிலிருந்தே மோடி தலைமையிலான அரசு முன்னெடுத்த தவறான கொள்கைகளால் மட்டுமே வளர்ச்சி குறைந்துள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பாஜக தனது தோல்வியை ஒத்துக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் நிதியமைச்சருமான சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடைசி காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 விழுக்காடுக்கு கீழ் இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், 3.1 விழுக்காடாக வளர்ச்சி பதிவாகியுள்ளது. இதன் மூலம் பொருளாதாரத்தை பாஜக எப்படி கையாள்கிறது என்பது தெரியவருகிறது. கடைசி காலாண்டின் 7 நாள்கள் மட்டுமே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது" என பதிவிட்டுள்ளார்.
வளர்ச்சி குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் பேராசிரியருமான கவுரவ் வல்லப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாட்டில் அதிகரிப்பதற்கு முன்பே, தவறான கொள்கைகளால் பொருளாதாரம் சிக்கி தவித்து தேக்கநிலை அடைந்தது. அரசு அமல்படுத்திய பணமதிப்பிழக்கம், சரக்கு மற்றும் சேவை வரி ஆகிய இரு காரணங்களால் பொருளாதாரம் பெரும் பாதிப்படைந்தது. அரசு தனது தவறையும் ஒத்துக் கொள்ளவில்லை, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான வழிமுறையையும் வகுக்கவில்லை" என்றார்.
-
Remember, this is pre-lockdown. Of the 91 days of Q4, lockdown applied to only to 7 days.
— P. Chidambaram (@PChidambaram_IN) May 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Remember, this is pre-lockdown. Of the 91 days of Q4, lockdown applied to only to 7 days.
— P. Chidambaram (@PChidambaram_IN) May 29, 2020Remember, this is pre-lockdown. Of the 91 days of Q4, lockdown applied to only to 7 days.
— P. Chidambaram (@PChidambaram_IN) May 29, 2020
இதையும் படிங்க: மோடி 2.0: ஓராண்டு நிறைவை ஒட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமர் கடிதம்