டெல்லி: வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,734 ரூபாயிலிருந்து 2,000.50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
எனினும், வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சில நாட்களுக்கு முன் கடைசியாக இதன் விலையை 15 ரூபாய் வரை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது மானியம் அல்லாத வீட்டு உபயோக சமையல் எரிவாயு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 899.50 ரூபாயாகவும் (டெல்லி விலை), 5 கிலோ எடை கொண்டது 502 ரூபாயாகவும் உள்ளது.
அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் சமையல் எரிவாயு விலையேற்றம் கண்டு வருகிறது என ஒன்றிய அரசு கூறினாலும், அதன் மீது தொடர்ச்சியாக போடப்பட்ட வரியே இதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: உடையும் கோத்ரேஜ் குழுமம் - இனி தனித்தனி நிர்வாகம் தான்!