ஆறாம் கட்ட ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலத்திற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அளித்தது. 2,251.25 மெகாஹெர்ட்ஸ் அளவு அலைக்கற்றைக்கு சுமார் ரூ.3.92 லட்சம் கோடி அடிப்படை மதிப்பாக வைத்து ஏலம் நடத்தப்படவுள்ளது.
இந்த ஏலத்திற்கான ஆலோசனை கருத்தரங்கு ஜனவரி 12ஆம் தேதியும், அறிக்கைத் தொடர்பான சந்தேகங்கள் விளக்கத்திற்கான கடைசிநாள் ஜனவரி 28ஆம் தேதியும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏலத்தில் பங்கேற்கவுள்ளவர்கள் தங்களின் விண்ணப்பங்களை வரும் பிப்ரவரி 5ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும். ஏலம் எடுப்போரின் இறுதிப்பட்டியல் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியிடப்படும். ஏலம் வரும் மார்ச் 1ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பட்ஜெட் 2021-22: பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளும் பிரதமர்