ETV Bharat / business

"நடப்பாண்டு இறுதிக்குள் ஏர் இந்தியா விற்கப்படும்" அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உறுதி! - ஏர் இந்தியா செய்திகள்

நடப்பாண்டு(2021) இறுதிக்குள் ஏர் இந்தியா தனியாருக்கு விற்கப்படும் என, ஒன்றிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா
author img

By

Published : Jun 4, 2021, 4:03 PM IST

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் திட்டம் நீண்ட நாள்களாகவே முன்னெடுக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக, கோவிட்-19 பெருந்தொற்று பரவல் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதத்தை ஏற்படுத்திவருகிறது.

விமான போக்குவரத்து துறை அமைச்சர் நம்பிக்கை

ஏர் இந்தியா விற்பனை குறித்து செய்தியாளர்களிடம் கூறிய ஒன்றிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி,"ஏர் இந்தியா தனியார்மயமாக்கும் திட்டம் பெருந்தொற்று காரணமாகத் தாமதமாகிறது. அதேவேளை, நடப்பாண்டு(2021) இறுதிக்குள் இது நிறைவுபெறும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். விற்பனைக்கான ஏலம் வரும் 64 நாள்களுக்குள் முடிவடையும் என, ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சுமார் ரூ.60 ஆயிரம் கோடி கடன் உள்ளது. எனவே, அதை விற்பதுதான் சரியான முடிவாக இருக்கும்" என்றார்.

இதையும் படிங்க: கோவிட்-19 எதிரொலி: ஆண்டு சம்பளத்தை உதறிய முகேஷ் அம்பானி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.