ETV Bharat / business

'விலை அதிகரிப்பால் பளபளப்பை இழக்கும் தங்கம்' - slumping interest on Gold as price increases

தங்கம் விலை உயர்வு காரணமாக, அண்மைக் காலமாக தங்கம் வாங்குவது குறைந்துள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

gold
author img

By

Published : Oct 20, 2019, 11:19 PM IST

தங்க தீபாவளி

பொதுவாக தீபாவளி பண்டிகையின் போது அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஊக்கத்தொகை (போனஸ்) வழங்கப்படும். இதனால் துணி, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதோடு தங்கம், வெள்ளிப் பொருட்களையும் வாங்குவர். ஆனால் தற்போதுள்ள பொருளாதார சூழலால் பல நிறுவனங்களில் போனஸ், ஊதிய உயர்வு போன்ற பலன்கள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தொடர் ஏறுமுகத்தில் தங்க விலை

ஒட்டுமொத்தமாக மக்களிடம் வாங்கும் திறன் குறைந்துவிட்டதைப் பொருளாதார குறியீடுகள் காட்டுகின்றன. இருப்பினும் தீபாவளி உற்சாகம் குறைந்துவிடவில்லை. துணிக்கடைகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் அலைமோதுகின்றனர். நகைக்கடைகளிலும் ஏராளமானவர்கள் தங்க ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தங்க விற்பனை மந்த நிலையிலேயே உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக அவர்கள் கூறுவது தங்கத்தின் விலை. இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு மூன்று ஆயிரத்து 666 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 29 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதுவும் வாசிங்க : ஹெச்.டி.எஃப்.சி. நிகர லாபம் ரூ.6,345 கோடி

தங்கத்தில் முதலீடு

தங்கத்திற்கும், பங்குச் சந்தைகளுக்கும் எதிர்மறையான தொடர்பு உள்ளது என்கிறார்கள் பங்குச்சந்தை வல்லுநர்கள். எப்போதெல்லாம் பங்குச் சந்தை வீழ்ச்சி பெறுகிறதோ அப்போது தங்க விலை உயரும்.

தற்போது, சர்வதேச பொருளாதார வளர்ச்சியை 3.3 சதவிகிதத்தில் இருந்து மூன்று சதவிகிதமாக பன்னாட்டு நாணய நிதியம் குறைத்து மதிப்பிட்டுள்ளது.

வர்த்தகப் போர் மற்றும் அரசியல் பிரச்னைகளால் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதன் எதிரொலியாக பங்குச் சந்தைகளில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. புதிய முதலீடு செய்து ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் தங்கம், கடன் பத்திரம் போன்றவற்றில் பாதுகாப்பாக தங்களது பணத்தை முதலீடு செய்கின்றனர். இது தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஜூலை மாதத்திலிருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து, செப்டம்பர் 5ஆம் தேதி சவரனுக்கு ரூ.30 ஆயிரத்தைத் தொட்டு புதிய உச்சத்தை எட்டியது. இந்தியாவில் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில் தங்கத்தின் நுகர்வு குறைந்துள்ளது என்று உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. சந்தைகளில் நிலவும் நிலையற்ற தன்மை, வளர்ச்சி குறைவு, அச்சம் ஆகியவற்றால் பல நாட்டு மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கிக் குவிக்கும் என்பதால் இனிவரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என உலக தங்க கவுன்சிலின் ஆய்வு கூறுகிறது.

இதுவும் வாசிங்க : அப்போ TIKTOK கிற்கு எதிர்ப்பு... இப்போ EDUTOK கிற்கு வரவேற்பு

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திருமண சீசன் முடிவடைந்துவிட்டதாலும், தங்கம் விலை உயர்ந்து வருவதாலும் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று தங்க நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.

தீபாவளிக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் சென்னையில் நகைக்கடைகள் பரபரப்பாகவே இருந்து வருகிறது.

"நீங்கள் சாதாரணமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து பார்த்தால் இதைவிடக் கூட்டம் அதிகமாக இருக்கும்" என்கிறார் நகைக்கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர்.

தற்போது தங்கத்தின் விலை மிகவும் உயர்ந்துள்ளதால் திருமணம், விஷேஷம் போன்ற அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் மட்டுமே வருகிறார்கள். பெரிய அளவில் மக்கள் நகைகள் வாங்குவதில்லை என்றார் அவர். மற்ற நாடுகளில் முதலீட்டுக்காக தங்கம் வாங்குவர். ஆனால், இந்தியாவில் மட்டும்தான் அது ஒரு கலாசாரமாக இருக்கிறது.

அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை உயர்ந்தாலும், இந்தியாவில் பண்டிகை காலம் நிறைவடைந்துவிட்டதால் தேவை குறைந்து தங்க விற்பனை சரியும் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.

இதுவும் வாசிங்க : பிரெக்ஸிட்டை ஒத்திவைக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரிட்டன் பிரதமர் கடிதம்

Intro:சென்னை:

தங்கத்தின் விலை உயர்ந்ததையடுத்து அண்மைக்காலமாக தங்கம் வாங்குவது குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். அடுத்து வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். Body:தங்க தீபாவளி

பொதுவாக தீபாவளி பண்டிகையின் போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஊக்கத்தொகை (போனஸ்) வழங்கப்படும். இதனால் துணி, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதோடு தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் வாங்குவர். ஆனால் தற்போதுள்ள பொருளாதார சூழலால் பல நிறுவனங்களில் போனஸ், ஊதிய உயர்வு போன்ற பலன்கள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து உயரும் தங்க விலை

ஒட்டுமொத்தமாக மக்களிடம் வாங்கும் திறன் குறைந்துவிட்டதை பொருளாதார குறியீடுகள் காட்டுகின்றன. இருப்பினும் தீபாவளி உற்சாகம் குறைந்துவிடவில்லை. துணிக்கடைகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் அலைமோதுகின்றனர். நகைக்கடைகளிலும் ஏராளமானவர்கள் தங்க ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இருப்பினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தங்க விற்பனை மந்த நிலையிலேயே உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக அவர்கள் கூறுவது தங்கத்தின் விலை. இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் தரம் கொண்ட ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 666 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 29 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தங்கத்தில் முதலீடு

தங்கத்திற்கும் பங்குச் சந்தைகளுக்கு எதிர்மறையான தொடர்பு உள்ளது என்கிறார்கள் பங்குச் சந்தை வல்லுநர்கள். எப்போதெல்லாமல் பங்குச் சந்தை வீழ்ச்சி பெறுகிறதோ அப்போதெல்லாமல் தங்கத்தின் விலை உயர்வு பெறும். தற்போது சர்வதேச பொருளாதார வளர்ச்சியை 3.3 சதவிகிதத்தில் இருந்து 3 சதவிகிதமாக பன்னாட்டு நாணய நிதியம் குறைத்து மதிப்பிட்டுள்ளது. வர்த்தகப் போர் மற்றும் அரசியல் பிரச்னைகளால் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் எதிரொலியாக பங்குச் சந்தைகளில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. புதிய முதலீடு செய்து ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் தங்கம், கடன் பத்திரம் போன்றவற்றில் பாதுகாப்பான தங்களது பணத்தை முதலீடு செய்கின்றனர். இது தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜூலை மாதத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து செப்டம்பர் 5 ஆம் தேதி சவரனுக்கு 30 ஆயிரத்தைத் தொட்டு புதிய உச்சத்தை எட்டியது. ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் தங்கத்தின் நுகர்வு குறைந்துள்ளது என்று உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. சந்தைகளில் நிலவும் நிலையற்ற தன்மை, வளர்ச்சி குறைவு அச்சம் ஆகியவற்றால் பல நாட்டு மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கிக் குவிக்கும் என்பதால் இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என உலக தங்க கவுன்சிலின் ஆய்வு கூறுகிறது.

நுகர்வு குறையும்

தமிழகத்தைப் பொறுத்தவரையில் திருமண சீசன் முடிவடைந்துவிட்டதாலும், தங்கம் விலை உயர்ந்து வருவதாலும் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று தங்க நகை வியாபாரிகள் கூறுகின்றனர். தீபாவளிக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் சென்னையில் நகைக்கடைகள் பரபரப்பாகவே இருந்து வருகிறது. "நீங்கள் சாதாரணமாக ஒரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து பார்த்தால் இதைவிடக் கூட்டம் அதிகமாக இருக்கும்" என்றார் நகைக்கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர். தற்போது தங்கத்தின் விலை மிகவும் உயர்ந்துள்ளதால் திருமணம், விஷேஷம் போன்ற அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் மட்டுமே வருகிறார்கள் பெரிய அளவில் மக்கள் நகைகள் வாங்குவதில்லை என்றார் அவர். மற்ற நாடுகளில் முதலீட்டுக்காக தங்கம் வாங்குவர். ஆனால் இந்தியாவில் மட்டும்தான் அது ஒரு கலாச்சாரமாக இருக்கிறது. அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை உயர்ந்தாலும் இந்தியாவில் பண்டிகை காலம் நிறைவடைந்துவிட்டதால் தேவை குறைந்து தங்க விற்பனை சரியும் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.

Conclusion:visual sent through mojo
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.