2022-2023ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(பிப். 1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது கிரிப்டோகரண்சி எனப்படும் டிஜிட்டல் கரண்சி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, "நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக பிளாக் செயின் மற்றும் ஏனைய தொழில்நுட்ப உதவிகளுடன் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்படும். 2022-23இல் இந்த டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி வெளியிடும்.
டிஜிட்டல் கரண்சி மூலம் வரும் அனைத்து வருவாய்களுக்கும் 30 விழுக்காடு வரி விதிக்கப்படும்" எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது அறிவிப்பில் கூறியுள்ளார். இந்த டிஜிட்டல் கரண்சி திட்டமானது பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Budget 2022: காவிரி - பெண்ணாறு இணைப்பு திட்டம் அறிவிப்பு