உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாண்டா மாவட்டத்தை தொடர்ந்து இன் மஹோபா மாவட்டத்தை வெட்டுக்கிளிகள் கூட்டம் ஆக்கிரமித்தது என மாவட்ட வேளாண் அதிகாரி வீர் பிரதாப் சிங் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது;
விவசாய நிலங்களில் 10 விழுக்காடு காய்கறிகள் இருந்ததால் வெட்டுக்கிளிகள் கூட்டம் அனைத்தும் மரங்களில் குடியேறியது.
ஜூன் 14 மாலை, கமல்கேரா கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தை தாக்கியது.
வெட்டுக்கிளிகள் கிராமத்தை அடைந்த செய்தி வந்தவுடன், வேளாண் துறை அலுவலர்கள், தீயணைப்புத் துறையினர் ரசாயனங்களை தெளித்தனர், அதைத் தொடர்ந்து லட்ச கணக்கில் வெட்டுக்கிளிகள் கொல்லப்பட்டன. சில வெட்டுக்கிளிகள் மழையில் இறந்தன. சில சிறிய வெட்டுக்கிளிகள் இன்னும் சுற்றி வருகின்றன, நிர்வாகமும் விவசாயிகளும் முழுமையாக எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். என அவர் தெரிவித்தார்.