சேலம் அடுத்த கந்தம்பட்டி அருகே உள்ள செஞ்சிக் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜகிரி. இவரது மனைவி பூங்கொடி. இருவரும் கூலி தொழிலாளர்கள். இவர்களுக்கு பவித்ரா என்ற மகளும்,தமிழரசன் என்ற மகனும் உள்ளனர்.
கணவன் மனைவி இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக பூங்கொடி தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் குழந்தைகளுக்காக பூங்கொடியிடம் சமாதானம் பேசி கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக ராஜகிரி தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
கடந்த 18 நாட்களுக்கு முன்பு குழந்தைகளுடன் இருவரும் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றபோது, இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் வீட்டுக்கு வந்த பூங்கொடி, ராஜகிரியை சரமாரியாக தாக்கியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த ராஜகிரி இறந்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக வீட்டின் பின்புறம் குழி தோண்டி , ராஜகிரியின் உடலை புதைத்து விட்டு ஒரு வாரமாக அந்த வீட்டிலேயே பூங்கொடி தங்கி இருந்துள்ளார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக பூங்கொடி வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பி ஓடியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர். பின்னர் சந்தேகத்தின் பேரில் வீட்டின் பின்புறம் உள்ள பகுதியை காவல்துறையினர் தோண்டினர். அப்போது அழுகிய நிலையில் ராஜகிரி உடல் புதைந்து இருந்தது. இதனைத்தொடர்ந்து உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பூங்கொடியை தேடி வருகின்றனர்.
கணவனை கொலை செய்து புதைத்த மனைவி - சேலத்தில் கணவனை கொலை செய்து புதைத்த மனைவி
சேலம்: குடும்பத் தகராறில் கணவனை கொலை செய்து, வீட்டின் பின்புறம் புதைத்து விட்டு தப்பிச்சென்ற மனைவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.