ETV Bharat / briefs

கரோனா தொற்றாளர்களை மீண்டும் பரிசோதிக்காமல் வீட்டிற்கு அனுப்புவது ஏன் ? - திமுக எம்எல்ஏ கேள்வி

மதுரை : குணமடைந்து வீட்டுக்கு திரும்பும் கோவிட்-19 தொற்றாளர்களுக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் கண்டறிதல் பரிசோதனை செய்யாமல் விடுவது ஏன் ? என்று திமுக எம்.எல்.ஏ பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கரோனா தொற்றாளர்களை மீண்டும் பரிசோதிக்காமல் வீட்டிற்கு அனுப்புவது ஏன் ? - திமுக எம்எல்ஏ கேள்வி
கரோனா தொற்றாளர்களை மீண்டும் பரிசோதிக்காமல் வீட்டிற்கு அனுப்புவது ஏன் ? - திமுக எம்எல்ஏ கேள்வி
author img

By

Published : Jul 10, 2020, 5:07 PM IST

உலகளாவிய பெருந்தொற்றுநோயான கரோனா தமிழ்நாடு முழுவதும் பரவலாக அதிகரித்து வருகிறது. மூன்றாம் கட்ட பரவலை எட்டியுள்ள கோவிட்-19னை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாக சுகாதாரத் துறை கூறியுள்ளது.

சிவப்பு குறியீட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களிலும் தொற்றின் தாக்கம் மிகக் கடுமையாகி உள்ளது.

குறிப்பாக, மதுரையில் பாதிக்கப்படுவோர், உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் மதுரை மத்திய தொகுதியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், வைரஸ் தொற்றால் அனுமதிக்கப்பட்டு குணமடைந்ததாக சொல்லி வீட்டிற்கு அனுப்பப்படும் நபர்களுக்கு மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்யப்படுவதில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தொன்றை வெளியிட்டுள்ள அவர், "கடந்த ஜூன் 29ஆம் தேதியிலிருந்து ஜூலை 8ஆம் தேதி வரை குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியதாக சொல்லப்பட்ட நபர்களில் ஏறக்குறைய 25 ஆயிரம் பேருக்கு இறுதி கட்டமாக கரோனா பரிசோதனை மீண்டும் செய்யப்படவில்லை.

தமிழ்நாட்டில் இதுவரை 15 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஆனால், டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன்னால் அந்த 25ஆயிரம் பேருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்படாதது ஏன்?" என தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுவரை மதுரையில் கரோனா பாதிப்பு காரணமாக 5 ஆயிரத்து 299 பேர் பாதிக்கப்பட்டும், 95 பேர் உயிரிழந்தும் உள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 1,203 பேர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.