ETV Bharat / briefs

அரசை சார்ந்திருப்பதை குறைக்கும் ஏர் இந்தியா! - விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

டெல்லி: விமான நிறுவனம் செயல்பாட்டு செலவைக் குறைக்கும் நோக்கில், ஏர் இந்தியா செயல்படுவதாகவும், இதன் காரணமாக பொருளாதார ரீதியாக அரசை சார்ந்து இருப்பதை குறைத்து வருவதாகவும் ஏர் இந்தியா நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராஜீவ் பன்சால் தெரிவித்துள்ளார்.

அரசை சார்ந்திருப்பதை குறைக்கும் ஏர் இந்தியா!

author img

By

Published : Jul 17, 2020, 4:21 AM IST

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராஜீவ் பன்சால், 'ஏர் இந்தியா நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கின் நிர்வாக கட்டமைப்பின் உயர்மட்டத்தை சீராக அதிகரிக்க முயற்சிக்கிறோம், அதே நேரத்தில் எங்கள் செலவையும் கட்டுப்படுத்த முயற்சிக்கிறோம்.

பொருளாதார ரீதியாக அரசாங்கத்தை முழுமையாக சார்ந்து இருப்பதைக் குறைக்க முயற்சித்து வருகின்றோம். மேலும் கடன், குத்தகை வாடகை, ஊழியர்களின் செலவுகள் மற்றும் இயக்க செலவுகளைக் குறைப்பதன் மூலம் செலவுகளைக் குறைக்க முயற்சிக்கிறோம்.

நாங்கள் விமானிகள், கேபின் குழுக்கள் மற்றும் பிற பணியாளர் பிரிவுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மேலும் அனைத்து விமான நிறுவனங்களும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார். அவ்வாறு செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டால் ஏர் இந்தியா நிறுவனம் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும்' எனவும் ராஜீவ் பன்சால் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா அரசாங்க சார்புநிலையை விரும்பினாலும், கரோனா நெருக்கடியின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, தற்போதைய நிலைமையில் மத்திய அரசால் அதிகளவில் முதலீடு செய்ய இயலாது. இதன்காரணமாக மத்திய அரசு தனியார்மயமாக்கல் முயற்சியில் ஈடுபட்டு வருதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

’ஏப்ரல் 2020 முதல் எங்களது ஊதியத்தில் 70% வழங்கப்படவில்லை. தேசத்திற்கு விசுவாசமாக இருந்த ஊழியர்களின் ஊதியக் குறைப்பு, நிறுவனத்திற்கு அவமானகரமானது" என்று மத்திய அரசிற்கு விமான ஊழியர்கள் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், 2018-19ஆம் ஆண்டில் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் நிகர இழப்பு தற்காலிகமாக ரூ.8,556.35 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா மற்றும் விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் அதன் கூட்டு நிறுவனமான ஏர் இந்தியா சாட்ஸ், ஏர்போர்ட்ஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுடன் தனது முழு பங்குகளையும் விற்க அரசு ஆரம்ப ஏலங்களை ஜனவரி மாதம் அறிவித்தது.

ஆனால், கரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, ஏர் இந்தியாவுக்கான ஏல ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 27 அன்று அரசு ஆகஸ்ட் 31 வரை நீட்டித்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.