ETV Bharat / briefs

கண்டலேறு அணையில் இருந்து நீர் நிறுத்தம்! - kandaleru dam

திருவள்ளூர்: கண்டலேறு அணையிலிருந்து சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு வரக்கூடிய கிருஷ்ணா நதி நீரானது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

கண்டலேறு அணை
கண்டலேறு அணை
author img

By

Published : Jun 24, 2020, 2:02 AM IST

பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து சென்னைவாசிகளுக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. இந்த கிருஷ்ணா குடிநீரானது ஆந்திரா, தமிழ்நாடு நதி நீர் ஒப்பந்தத்தின்படி ஆண்டுதோறும் ஆந்திர அரசு தமிழ்நாட்டிற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி அளவும் நீரையும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி அளவும் நீரையும், 3 டிஎம்சி சேதாரம் என மொத்தம் 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்.

ஆனால் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆந்திர அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்காததால், இந்த காலத்தில் தண்ணீர் திறக்கக் கோரி தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர். போதிய அளவு தண்ணீர் இல்லை எனக்கூறி தண்ணீர் திறக்க ஆந்திர அரசு மறுத்துவிட்டது.

இவ்வேளையில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆந்திராவில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. இதையடுத்து தமிழ்நாடு சார்பில் தண்ணீர் திறக்கக் கோரி மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று ஸ்ரீசைலம் அணையில் இருந்து சோமசீலா, கண்டலேறு அணைகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் 13 டிஎம்சி நீர் இருப்பு இருந்தது. கண்டலேறு அணையில் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஆந்திர அரசு தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 8 டிஎம்சி தண்ணீர் இருக்கும் பட்சத்தில், 7.5 டிஎம்சி தண்ணீர் தந்தது.

இதற்கிடையில் மீதமுள்ள 5 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும் என ஆந்திர அரசிடம் மீண்டும் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது. அதன்பேரில் ஆந்திர அரசு மே மாதம் 25ஆம் தேதி 500 கன அடி வீதம் கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டது. தண்ணீரானது 27ஆம் தேதி 1200 கன அடியாக திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் 152 கிலோமீட்டர் கடந்து, நான்கு நாட்களுக்குப் பிறகு 28ஆம் தேதி இரவு 8:30 மணியளவில் தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைபாக்கம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது. இச்சூழலில் நேற்று முன்தினம் கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் திடீரென நிறுத்தப்பட்டது. இதுவரை மாநிலத்துக்கு 8.52 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.