தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி முதல் தொடர்ந்து இரட்டை, மூன்றிலக்க எண்களில் கரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகி வருகிறது. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் நகருக்குள் வரும் அனைத்து சாலைகளும் தடுப்புக் கட்டைகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பகுதியில் அதனைக் கண்காணிக்க காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.