திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்படி, ராச்ச மங்கலம் கிராமத்தில் கிராம விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எஸ்பி விஜயகுமார் கூறுகையில், " கிராமத்திற்குள் நுழையும் சந்தேக நபர்களை பற்றியும் கிராமத்தில் நடைபெறும் குற்றச் செயல் குறித்தும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
தகவல் சொல்பவர்கள் குறித்து விவரம் ரகசியமாக வைக்கப்படும். வெகுமதியும் வழங்கப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சுதல், அதற்கு துணை போகுதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் திருந்தி வாழ முன்வந்தால் வேறு தொழில் செய்ய அரசின் உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு மற்றும் வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் காவல் துறையை அணுகலாம்.
காவல் துறை என்றென்றும் உங்கள் நண்பன், காவல் துறை பற்றி பயம் கொள்வது இருப்பது போன்றவற்றிலிருந்து விடுபட வேண்டும்" என்று கூறினார்.