ETV Bharat / briefs

கிரீமிலேயர் முறையை மத்திய அரசு கைவிட வேண்டும் - தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்!

author img

By

Published : Jul 9, 2020, 5:47 PM IST

சென்னை:சமூக நீதியின் அடிப்படைக்கு எதிரான கிரீமிலேயர் முறையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

கிரீமிலேயர் முறையை மத்திய அரசு கைவிட வேண்டும்- தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கும்போது 'கிரீமிலேயர்' வருமான வரம்பைக் கணக்கிடுவதில் புதிய அம்சங்களை சேர்க்கும் மத்திய அரசின் முயற்சி கண்டிக்கத்தக்கது.

கிரீமிலேயர் முறையை முற்றாகக் கைவிடவேண்டும் எனவும், அதற்காக எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சட்டத் திருத்தம் கொண்டுவரவேண்டும் எனவும், மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

மண்டல் கமிஷன் வழக்கில், கடந்த 1992ஆம்ஆண்டு தீர்ப்பளித்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிசெய்தது. ஆனால், பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதார ரீதியில் முன்னேறியவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது எனக் கூறி ‘கிரீமிலேயர்’ என்ற பொருளாதார அளவுகோலை உருவாக்கியது.

அதனடிப்படையில் ஒரு லட்ச ரூபாய் ஆண்டு வருமானம் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை என வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த வரம்பு உயர்த்தப்படவேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

அவ்வாறு உரிய காலத்தில் அந்த வரம்பு உயர்த்தப்படவில்லை. 12 ஆண்டுகள் கழித்து கடந்த 2004 ஆம் ஆண்டுதான் அது ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதத்தில் கிரீமிலேயர் வரம்பை ரூ.6 லட்சமாக உயர்த்தி, மத்திய அரசு ஆணை வெளியிட்டது.

அது 2017 ஆம் ஆண்டு ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது. கிரீமிலேயர் வரம்பை இந்த ஆண்டு சீராய்வு செய்ய வேண்டிய நிலையில், அதனை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும் என இப்போது மத்திய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

அதற்கு எந்த பதிலையும் சொல்லாத மத்திய அரசு, கிரீமிலேயரைக் கணக்கிடும்போது பெற்றோரின் சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தையும் சேர்த்து அரசு திருத்தம் கொண்டுவருகிறது.

இதனால் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் இட ஒதுக்கீடு பெற முடியாமல் ஆக்கப்படுவர். இது பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டு உரிமையை முற்றாக ஒழிப்பதற்கான சதியாகும்.

இந்தச் சமூக அநீதியை மத்திய அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என அந்த அறிக்கையில் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.