ETV Bharat / briefs

இரண்டு நாள் கடையடைப்பு அறிவிப்பு - ஊராட்சி மன்றம் மற்றும் வர்த்தக சங்கம் இணைந்து கடையடைப்பு அறிவித்துள்ளது

புதுக்கோட்டை: திருமயத்தில் தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை ஏற்பாடாக இரண்டு நாளைக்கு கடையடைப்பு என ஊராட்சி மன்றம் மற்றும் வர்த்தக சங்கம் இணைந்து அறிவித்துள்ளது.

இரண்டு நாள் கடையடைப்பு - ஊராட்சி மன்றம் மற்றும் வர்த்தக சங்கம் இணைந்து அறிவிப்பு

author img

By

Published : Jun 17, 2020, 1:45 PM IST

புதுக்கோட்டை மாவட்ட திருமயம் டவுன் பாப்பாவயலில் தந்தை இறந்த துக்கத்திற்கு சென்னையில் இருந்து வந்த பெண் போலீஸ் ஜோதிக்கு (36) கரோனா தொற்று உறுதியாகி புதுகை ராணி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அப்பகுதியில் வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ்குமார், தாசில்தார் சுரேஷ், பிடிஓ. மெய்யப்பன், பஞ்சாயத்து தலைவர் சிக்கந்தர் ஆகியோர் முகாமிட்டு நிவாரணப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

அந்தப் பெண்ணின் அருகில் இருந்தவர்கள், அவரது தாய், உறவினர்கள் என ஏழு பேரை தனிமைப்படுத்தியுள்ளனர். அந்தப்பகுதியில் உள்ள மக்கள் வெளியே செல்லவும், வெளிஆட்கள் உள்ளே வரவும் பேரி காடு வைத்து போலீசார் தடை ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும் தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை ஏற்பாடாக இரண்டு நாளைக்கு கடையடைப்பு செய்யப்படும் என ஊராட்சி மன்றம் மற்றும் வர்த்தக சங்கம் இணைந்து அறிவித்தனர்.

இதற்கிடையில், சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச்சென்று அங்குள்ள மக்களுக்கு கரோனா தொற்று அறிகுறி உள்ளதா என ஆய்வு செய்தனர். ஊராட்சி சார்பில் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: இ-பாஸ் பெற்றுவந்தாலும் அனுமதி மறுப்பு - முதலமைச்சர் நாராயணசாமி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.