ETV Bharat / briefs

20 லட்சம் மதிப்புள்ள விசைப்படகு சேதம்- சோகத்தில் மீனவர்!

புதுச்சேரி: துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு சேதமடைந்ததால் மீனவர் ஒருவர் கடலுக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார்.

விசைப்படகு
விசைப்படகு
author img

By

Published : Jun 6, 2020, 10:29 PM IST

புதுச்சேரி வீராம்பட்டினம், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் மீனவர் சுப்பிரமணியம். இவர், தனக்குச் சொந்தமான விசைப்படகு மூலம் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வந்துள்ளார். இதற்கிடையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக, தனது விசைப்படகை தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளார்.

விசைப்படகு
சேதமடைந்து காணப்படும் விசைப்படகு...!

இந்த நிலையில் நேற்று மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்த நிலையில், மீன்பிடி தொழில் செய்வதற்காக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகை பார்த்தபோது, அது பலத்த சேதம் அடைந்திருந்தது. சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான படகு, நீரில் மூழ்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக, சுப்பிரமணியம் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.