அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கரோனாவால் மக்கள் ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாள்தோறும் உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் விலையால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர்ந்து வருகிறது.
இதனால், சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகித் தவிக்கும் மக்களின் நிலையைப் புரிந்துகொண்டு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
அண்மையில் உயர்த்தப்பட்ட வாட் வரியைக் குறைப்பதன் மூலம், தமிழ்நாடு அரசும் மக்களின் சுமையைக் குறைக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.