ETV Bharat / briefs

சம்பளப் பிடித்தம் - பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் காத்திருப்புப் போராட்டம்! - Theni latest News

தேனி : சம்பளப் பிடித்தம் செய்யப்படுவதைக் கண்டித்து பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேனி பணிமனை முன்பாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Transport Workers protest For Salary issue

author img

By

Published : May 31, 2020, 11:09 PM IST

கரோனா நோய்ப் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்குத் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், அனைத்து பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்கள், சுற்றுலா, வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு மே மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்போவதாகத் தொழிலாளர்கள் மத்தியில் தகவல் பரவியது. இது தொடர்பாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் சார்பில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மேலும் சம்பளம் பிடித்தம் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களும் இன்று பணிமனை முன்பாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியில் உள்ள பணிமனையில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

144 தடை உத்தரவு அமலில் இருக்கும் சூழலில், போராட்டம் நடத்தக்கூடாது என தேனி காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜ், தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் பணிமனையில் இருந்து தொழிலாளர்கள் நுழைவுவாயிலில் காத்திருந்தனர். இதனால் அங்கு பாதுகாப்புப் பணியில் காவல் துறையினர் கூடுதலாக குவிக்கப்பட்டனர்.

இது குறித்து போக்குவரத்து தொழிலாளர்கள் கூறுகையில், 'பொது ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படாது என அரசு அறிவித்திருந்தது. ஆனால், தொழிலாளர்களின் சம்பளப் பிடித்தம் செய்யும் நடவடிக்கைகளில் போக்குவரத்துக் கழகங்கள் ஈடுபட்டு வருவதாக' குற்றம்சாட்டினர்.

இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனைத் தெரிவித்தனர். எனவே, தமிழ்நாடு அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.