கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ள வாங்கப்பாளையம் பிரிவு சாலை அருகில், சரக்கு ஏற்றி வந்த லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது. அதில் பயணம் செய்தவர்களுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது.
அந்த நேரத்தில் அப்பகுதி வழியாகச் சென்ற தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், காயமடைந்தவர்களை மீட்டு, தன்னுடன் வந்த பாதுகாப்பு காவல்துறை வாகனத்தில் ஏற்றி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.
அமைச்சரின் மனிதாபிமானமிக்க செயலுக்கு நன்றி என விபத்தில் காயமடைந்தவர்கள் தெரிவித்தனர்.