சென்னை விருகம்பாக்கம் கணபதி ராஜ் நகரை சேர்ந்தவர் ரிஷோத் (23). இவர், எம்பிபிஎஸ் மருத்துவப் பட்டப்படிப்பு முடித்து, தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள விடுதியில் தங்கி கொண்டு பயிற்சி மருத்துவராக குழந்தைகள் நல வார்டில் பணிபுரிந்து வருகிறார்.
குடும்பப் பிரச்சனை காரணமாக, கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் ரிஷோத் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு இவர் மருந்து உட்கொண்டு வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், இன்று (ஜூலை 11) காலை 5 மணியளவில் விடுதியில் உள்ள அவரது அறை கழிவறைக்குச் சென்ற ரிஷோத், நீண்ட நேரமாக வெளியே வராமல் இருந்துள்ளார்.
பின்னர் சந்தேகமடைந்த அருகில் தங்கியிருந்த மருத்துவ மாணவர்கள் கழிவறை கதவை உடைத்து பார்க்கும்போது, ரிஷோத் சர்ஜிகல் பிளேடால் கையை கிழித்து கொண்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் உடனடியாக ரிஷோத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். சிகிச்சைக்குப் பின்னர் ரிஷோத்தின் உடல் நிலை ஓரளவு குணமடைந்து வருவதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.