திருவாரூர் மாவட்டம் கோமல் கிராமத்த்தில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் ,தந்தை, மகள் மூவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தந்தை சென்னையில் வேலை பார்த்துவந்து ஊர் திரும்பிய நிலையில், அவருக்கு பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவர் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை உள்பட ஐந்து நபர்கள் திருவாரூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி வந்த நன்னிலம் பகுதியைச் சேர்ந்த நபருக்கு கரோனா தொற்று தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் திருவாரூர் மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 149ஆக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.