ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நேற்று வரை 3 ஆயிரத்து 94 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம், பரமக்குடி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது வரை 67 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இன்று (ஜூலை28) 77 வயது முதியவர், 56 வயது பெண் என இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்தது. மேலும் இன்று புதிதாக 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ராமநாதபுரத்தில் காரோனாவால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 132 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: கறுப்பர் கூட்டத்திற்கு பாஜக மாநில இளைஞர் அணி எதிர்ப்பு!