ETV Bharat / briefs

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: இடைத்தரகருக்கு பிணை மறுப்பு - Chennai district principal court

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முறைகேடுகள் வழக்கில், கைது செய்யப்பட்டவருக்கு பிணை வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

TNPSC malpractices, broker bail petition dismissed, Chennai district principal court order

author img

By

Published : Jun 12, 2020, 9:14 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2, குரூப்-4 தேர்வுகளில் முறைகேடுகள் செய்தது தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த முறைகேடுகள் தொடர்பாகப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இடைத்தரகர் ஜெயகுமாருடன் பணியாற்றிய சம்பத் என்பவர், கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். சிறையில் உள்ள சம்பத், தனக்கு பிணை வழங்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு, முதன்மை அமர்வு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, இடைத்தரகர் ஜெயகுமாருக்கு உடந்தையாக சம்பத் செயல்பட்டுள்ளதாகவும், விடைத்தாள்களை திருத்த உதவியதாகவும் கூறிய அரசுத்தரப்பு வழக்கறிஞர், அவருக்கு பிணை வழங்கக் கூடாது என வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, சம்பத்திற்கு பிணை வழங்க மறுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.