இந்தியாவில் நடைபெற்ற 17ஆவது மக்களவைத் தேர்தலில், பாஜக தனித்து 303 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.இதில், தமிழ்நாட்டில் நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் தி.முக. கூட்டணி கட்சிகள் 37 இடங்களில் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்துடன் அபார வெற்றிபெற்றது. குறிப்பாக, சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விசக தலைவர் தொல். திருமாவளவன் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாலும், இவரது வெற்றியை தமிழ்நாடு முழுவதும் கொண்டாடிவருகின்றனர்.
இதில், பாஜக, பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்த அதிமுக தேனி மக்களவைத் தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது அக்கட்சியின் தொண்டர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் கடந்த மக்களவைத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காத அதிமுக 37 இடங்களிலும், பாஜக , பாமக ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது. இதில், திமுக கூட்டணி கட்சிகள் எந்த ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை.
தற்போது, தமிழ்நாட்டில் கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள், இம்முறை வெற்றிபெற்றவர்களின் பெயர் விவரங்கள் சில இதோ