மத்திய அரசு அமல்படுத்தி உள்ள நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய சூழ்நிலையில் நடிகரும் அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்தவருமான நடிகர் சூர்யா நீட் தேர்வுக்கு எதிராக தனது கண்டனத்தை அறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருந்தார் .
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்டம் குமரன் நினைவகம் முன்பாக இந்து முன்னணியின் இளைஞர் அணி சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடிகர் சூர்யாவின் உருவப்படத்தை கிழித்தும், அவற்றை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு செருப்பு மாலை அணிவிக்கவும் முயன்றனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் அவற்றை அப்புறப்படுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.