டெல்லி அமர் காலனி காவல் நிலையத்தில் பணிபுரிந்துவரும் ஓம்பிரகாஷ், பிரவீன், ராய் சிங் ஆகியோர் காவல் பணியாற்றும் போது கரோனா நோயால் பாதிக்கப்பட்டனர்.
அதன்பின்னர் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தனர். தற்போது இந்த காவலர்கள் மூவரும் தங்கள் ஊநீரை (பிளாஸ்மா) கரோனா நோயால் பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தானமாக அளித்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லி தென்கிழக்கு டிசிபி ஆர்.பி. மீனா கூறுகையில், “இந்தக் காவலர்கள் மூவருக்கும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். பின்பு மருத்துவமனையில் 14 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு, அவர்கள் அனைவரும் குணமாகியுள்ளனர்.
தற்போது கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஊநீரை (பிளாஸ்மா) தானம் செய்ய முடிவு செய்துள்ளனர். இது பாராட்டப்பட வேண்டிய செயலாகும்” என்றார்.