ETV Bharat / briefs

15 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு: மூன்று பேர் கைது! - சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு

திருவண்ணாமலை: ஃபேஸ்புக் பழக்கத்தால் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

15 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு: மூன்று பேர் கைது!
3 persons arrested for sexual harassment in thiruvannamalai
author img

By

Published : Jul 27, 2020, 9:42 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கம்பன் நகர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், வந்தவாசி அடுத்த இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த இலியாஸ் என்பவருக்கும் ஃபேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி அன்று இலியாஸ் என்பவர் 15 வயது சிறுமியை வந்தவாசி புறவழி சாலையில் உள்ள சவுக்குத் தோப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது இலியாஸ் நண்பர்களான இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பர்கத், கீழ் சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா, ஆகிய இரண்டு பேர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வரவழைத்தார்.

இதையடுத்து மூன்று பேர்கள் ஒன்று சேர்ந்து கூட்டாக 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து சிறுமியை சவுக்குத் தோப்பில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். இதையடுத்து சிறுமி அலங்கோலத்துடன் அழுதுகொண்டு வெளியே வந்துள்ளார்.

இதையடுத்து தகவலறிந்த பெற்றோர்கள் 15 வயது சிறுமியை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்தப் புகாரின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ இடமான சவுக்கு தோப்புக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இலியாஸ் பர்கத் சூர்யா ஆகிய மூன்று பேர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்தவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.