தமிழ்நாட்டில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வைரஸ் பரவாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் 333 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மதுரை அரசு இராசாசி மருத்துவமனை விரிவாக்க கட்டடத்தின் எதிரே அமைந்துள்ள, உயர்தர பல்நோக்கு சிகிச்சை மருத்துவமனை வளாகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், மதுரையிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த காரைக்குடி அழகப்பாபுரம், கொடைக்கானல், ஆழ்வார்புரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.