ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு சிறப்பு காவல் பட்டாலியன் 12 புதிய வளாகம் கட்டும் பணி சக்கரக்கோட்டை பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த வளாகப் பகுதியில் பிரதமர் கனிமவள நலத் திட்டம், மாவட்ட கனிமவள அறக்கட்டளை மற்றும் அப்துல் கலாம் சமுதாய காடுகள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது.
இதில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் கலந்து கொண்டு முதல் மரக்கன்றை புதிதாக அமைய உள்ள வளாகத்தில் நட்டு வைத்தார்.
உடன் அப்துல் கலாமின் பேரன் சலீம், துணை காவல் துறை கண்காணிப்பாளர் பட்டாலியன் 12 சேர்ந்த காவலர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர், “வறட்சியாகவும் பச்சை குறைந்த பகுதியாக உள்ள ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசின் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 429 கிராமங்களில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் ஆண்டில் அதனை மூன்று மடங்காக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.