ETV Bharat / briefs

'கோல்டன் பிரீயட்' மக்களை காப்பாற்ற இப்போதாவது செயலாற்றுங்கள்! - Stalin Vs Edappadi Palanisamy

சென்னை : ஊரடங்கு காலத்தையாவது வீணடிக்காமல், கரோனா பேரழிவிலிருந்து மக்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

'கோல்டன் பிரீயட்'  மக்களை காப்பாற்ற இப்போதாவது செயலாற்றுங்கள்!

author img

By

Published : Jun 24, 2020, 4:29 PM IST

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு - ஊரடங்குக்குள் ஊரடங்கு என்று மாற்றி மாற்றி அறிவித்து இன்றுடன் 90 நாட்கள் ஆகின்றன. மூன்று மாதகால முழு முடக்கம் காரணமாக, தினக்கூலிக்காரர்கள், சிறிய - பெரிய வணிகர்கள், தொழிலாளர்கள் என சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் முறையான வருமானம் இல்லாமல், வாழ்வாதாரத்தை மொத்தமாய்த் தொலைத்து துன்பங்களால் தவிக்கின்றனர். அவர்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் சிறிதேனும் சிந்தித்ததா என்றால் அதுவும் இல்லை.

மின் கட்டணத்தைச் செலுத்துவதற்கு சலுகை உண்டா என்றால், அரசாங்கத்தை எப்படி நடத்துவது என்று திருப்பிக் கேட்கிறார் முதலமைச்சர். அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊக்க ஊதியம் உண்டா என்றால், 'அவர்கள் ஏற்கனவே பார்த்த வேலையைத்தானே பார்க்கிறார்கள்' என்று சொல்கிறார். ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்குச் சிறப்பு ஊதியம் உண்டா என்றால், ஆம்புலன்ஸ் 'ஊழியர்கள் என்றால் யாரு' என்று கேட்கிறார் முதலமைச்சர். இந்த கரோனா காலத்திலும் தன்னால் முடிந்த கொடூர சேவையாக பெட்ரோல், டீசலுக்கான வரியை ஏற்றி விலையையும் ஏற்றிக் கொண்டார் முதலமைச்சர் பழனிசாமி.

கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாதம் 5 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்குங்கள் என்று தொடக்கத்திலிருந்தே நான் கோரிக்கை வைத்து வருகிறேன். இரக்கமற்ற முதலமைச்சருடைய இதயம் சற்றும் இறங்கிவரவில்லை. கரோனாவால் பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதி மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் அரசு வழங்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தேன். அப்போதுதான் அந்தப் பகுதி மக்கள் வெளியில் வராமல் இருப்பார்கள் என்றும் அறிவுறுத்தி இருந்தேன். அதற்கும் இந்த அரசு ஏனோ செவி சாய்க்கவில்லை.

பொது முடக்கம் இருந்தால் தானே இந்தக் கோரிக்கைகள் வரும் என்று நினைத்த முதலமைச்சர், ஊரடங்கை தளர்வுக்கு மேல் தளர்வு செய்து, அந்தச் சட்டத்தின் சாரத்தையே மண்ணில் கொட்டிவிட்டார்.

பொதுமக்களுக்கு மின்கட்டணம் செலுத்த ஜூலை 31 வரை கால அவகாசம் வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழ்நாடு அரசு அளித்த பதிலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மட்டும் ஜூலை 15ஆம் தேதிவரை கால அவகாசம் தருவோம் என்று சொல்லி இருக்கிறார்கள். மற்ற மாவட்டங்களுக்கு அவகாசம் கிடையாது என்று அரசு சொல்லி இருக்கிறது.

கரோனாவால் பாதிக்கப்பட்டதும், வாழ்வாதாரம் முடங்கிக் கிடப்பதும் இந்த நான்கு மாவட்டங்கள் மட்டும் தானா? மற்ற மாவட்டத்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படவில்லையா? மொத்த மாநிலமே முடங்கிக் கிடக்கும் போது, நான்கு மாவட்டத்தை மட்டும் பிரித்து சலுகைகள் அறிவிப்பது எதற்காக? ஒரு ஜனநாயக அரசு, பேரிடர் காலத்தில் மக்களுக்குச் செய்ய வேண்டிய உதவிகளையும் செய்யவில்லை; தர வேண்டிய சலுகைகளையும் வழங்கவில்லை; கரோனாவையும் தடுக்கவில்லை; அதன் பரவலையும் கட்டுப்படுத்தவில்லை; மரணம் அடைகின்றவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையையும் நாளுக்கு நாள் அதிகரிப்பேன், மின் கட்டணத்தையும் செலுத்தக் கட்டாயப்படுத்துவேன் என்று, மக்கள் மீது நிதி நெருக்கடித் தாக்குதலை முதலமைச்சர் பழனிசாமி தொடுத்து கொண்டு இருக்கிறார்.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாயை வீடு விடாகச் சென்று தர வேண்டும் என்று அரசு சொல்லியிருக்கிறது. ஆனால் பெரும்பாலான இடங்களில் ஆயிரம் ரூபாயை வீடு வீடாகச் சென்று வழங்கவில்லை. ரேஷன் கடைகளுக்கு மக்களை வரவழைத்துக் கொடுத்துள்ளார்கள். ஒரு தெருவுக்குச் சென்று பொதுவான இடத்தில் நின்று கொண்டு, மக்களை அங்கு வரவழைத்துக் கொடுத்துள்ளார்கள். இதனால் மக்கள் கூட்டமாகக் கூடுவதும், தனிமனித இடைவெளியில்லாமல் போனதும், இதன் மூலமாகவும் கரோனா பரவலும் நடக்கிறது.

'வந்தாரை வாழவைக்கும் சென்னை' என்று பெயர் பெற்ற மாநகரத்தில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மனம் வெந்து நொந்து, தங்கள் ஊர்களை நோக்கிப் பயணப்படுகிறார்கள். அதற்கு கரோனா பீதி மட்டுமே காரணமல்ல; வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசும் எதையும் செய்ய முன்வரவில்லை என்ற சோகத்திலும் விரக்தியிலும் தான் புறப்பட்டுச் செல்கிறார்கள்.

இந்த மக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்பதை உணருங்கள். வாழ்க்கை விரட்டுகிறது, அத்தோடு சேர்ந்து அரசாங்கமும் விரட்டுகிறது என்றால், மக்கள் என்ன செய்வார்கள்? முதலமைச்சர் நாற்காலி, அமைச்சரவை, அரசாங்கம், நிதிக்கருவூலம், கோட்டை என அத்தனையையும் வைத்திருக்கும் முதலமைச்சர் பழனிசாமி தானே இம்மக்களைக் காக்க வேண்டும்?

இப்போது நிலவும் சூழலை மருத்துவ நிபுணர்கள் 'கோல்டன் பீரியட்' என்கின்றனர். இந்த நேரத்தில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். அலட்சியத்தால், அக்கறை இன்மையால், தன்னிச்சையான அணுகுமுறையால், இந்த 90 நாட்களையும் வீணடித்தது போல, இனியும் வீணடித்து, மக்களை வேதனை வலைக்குள் வீழ்த்தி விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.