திருநெல்வேலி மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவுக்கு அவ்வபோது நாய்க்குட்டிகள் வாங்கப்பட்டு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. குறிப்பாக வெடிகுண்டு கண்டறிதல் உள்ளிட்ட பணிகளுக்காக துப்பறியும் நாய் குட்டிகள் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், மாவட்ட துப்பறிவு பிரிவுக்கு இன்று (ஜூலை30) புதிய நாய்குட்டி வாங்கப்பட்டு அதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், ஜாக்(Jack) என்று பெயர் சூட்டினார்.
மேலும் இந்த நாய் குட்டிக்கு நல்ல முறையில் பயிற்சி அளிக்கவும், பராமரிக்கவும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்வில், மோப்ப நாய் பிரிவு உதவி ஆய்வாளர் மாடசாமி, சிறப்பு உதவி ஆய்வாளர் கருப்பசாமி, பயிற்சியாளர் தலைமைக் காவலர் நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: கிராமப்பகுதிகளில் கரோனா பாதிப்பு குறைவு - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி