ETV Bharat / briefs

”அதிமுக தொண்டர்களையும் கட்சியையும் காப்பாற்றுங்கள்!” - வைரலாகும் போஸ்டர்

author img

By

Published : Sep 14, 2020, 1:42 PM IST

பெரம்பலூர் : குன்னம் சட்டப்பேரவை உறுப்பினரும் மாவட்ட அதிமுக செயலருமான ஆர்.டி.ராமச்சந்திரனுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குன்னம் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிரான போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரல்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவை உறுப்பினராகவும், மாவட்ட அதிமுக செயலராகவும் இருப்பவர் ஆர்.டி.ராமச்சந்திரன். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி மாவட்ட அதிமுக அவைத்தலைவர், மாவட்ட அமைப்பு சாரா அணித்தலைவர், மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டிப் பூசல் தொடர்ந்து வந்தது. இந்நிலையில், கழக நிர்வாகிகள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய மாவட்டக் கழக செயலர் ஆர்.டி.ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஒரு குழுவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அதில், ”மாவட்ட அதிமுக தொண்டர்களையும் கட்சியையும் காப்பாற்றுங்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளனர். அம்மாவட்ட அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பைக் கிளப்பியுள்ள இந்தப் போஸ்டர், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்தப் போஸ்டர் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் கலைவாணர் அரங்கிற்கு எதிராக ஒட்டப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.