பெரம்பலூர் மாவட்டம், எசனை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மகன் அருண், ஜார்ஜியா நாட்டில் மருத்துவ படிப்பு முடித்துள்ளார்.
இந்நிலையில், மாணவர் அருணின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் இவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது தாயாரின் சிறுநீரகம் பொறுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திலையில், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண், மருத்துவ சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாதையை அறிந்த குன்னம் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.டி ராமச்சந்திரன் தனது சொந்த நிதியிலிருந்து .50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்திருந்தார்.
அதன்படி, குன்னம் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.டி.ராமச்சந்திரன் சார்பில் பெரம்பலூர் அதிமுக ஒன்றியச் செயலர் செல்வகுமார் நிதி உதவி வழங்கினார்.