ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள ஒலகடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் அம்மா நகரும் நியாயவிலைக் கடை திட்டத்தின்கீழ் ரேசன் பொருள்களைப் பொதுமக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று வழங்கும் மூன்று வாகனங்களைத் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், மாவட்ட ஆட்சியர் கதிரவன், ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
இந்த வாகனத்தில், ரேஷன் பொருள்களான அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் பொதுமக்களின் இருப்பிடத்திற்குச் சென்று வழங்கும் வகையில் உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 27 கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 51 இடங்களில் அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
இந்த வாகனங்கள் மூலம் பவானி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பருவாச்சி, பெரியவடமலைபாளையம், ஒலகடம் ஆகிய எட்டு இடங்களில் 962 குடும்ப அட்டைகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு, மாதத்தில் ஒருநாள் மட்டும் விநியோகம் செய்யப்பட உள்ளது.