தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒன்றியக்குழு சார்பில், 450 ஏக்கர் பாசன வசதிபெறும் வெண்டையம்பட்டி பெரிய ஏரியின் வரத்து வாய்க்காலான பல்லாங்குளம் வடிகால், பொதுப்பணித்துறை சார்பில் சுமார் 35 ஆண்டுகள் காலமாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதைக் கண்டித்தும், வருங்காலங்களில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளும் போது, ஏரியின் முக்கிய நீர் ஆதாரமான இந்தப் பல்லாங்குளம் வடிகாலையும், வரத்து வாரிய திட்ட மதிப்பீட்டில் இணைத்து நிதி ஒதுக்கி, தூர்வாரிட வலியுறுத்தியும், நடப்பாண்டு தூர்வாரும் பணி நடைபெற்றது.
சுமார் 2 கி.மீ நீளத்திற்கு நேற்று (14-07-2020) காலை 10 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பூதலூர் ஒன்றியச் செயலாளர் இரா.இராமச்சந்திரன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வரும் நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் மு.அ.பாரதி, ஏஐடியூசி மாநிலச் செயலாளர் சி.சந்திரக்குமார், வெண்டையம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் சி.கனிமொழி சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் 16ஆவது வார்டு சு.லதா சுப்பிரமணியன் சிபிஐ, 13ஆவது வார்டு மு.மதுபாலா முத்தமிழ்செல்வன்.
ஒன்றிய துணைச் செயலாளர்கள் கே.செந்தில்குமார், எம்.துரைராஜ், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆர்.ஆர்.முகில், டி.கண்ணகி, ஒன்றிய நிர்வாகிகள் எல்.ஞானசேகரன், டி.ராமச்சந்திரன், டி.நாகராஜ்,ஜி.ஜெயபால்,வி.ராமமூர்த்தி,என்.சீதையம்மாள்,எம்.அந்தோணிசாமி,பி.மாரியய்யா,கே.ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
இறுதியில், வெண்டையம்பட்டி கிளைச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், கிளைச் செயலாளர் ஜி.கணேசமூர்த்தி ஆகியோர் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினர்.