கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், பங்காரபேட் வட்டாட்சியர் சந்திரமெளேஷ்வர். இவர் டொத்தகவலாஞ்சி கிராமத்தில் வெங்கடபதி என்பவரின் நிலத்தை அளவீடு செய்ய சென்றுள்ளார்.
அப்போது சந்திரமெளேஷ்வர்க்கும் வெங்கடபதிக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடபதி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு வட்டாட்சியரை சராமரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதைக் கண்ட அவ்வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே வட்டாட்சியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காமசமுத்ரா காவல் துறையினர் வழக்குப்பதிவுசெய்து தப்பியோடிய வெங்கடபதியை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் ஆவின் வாகனம் விபத்து - ஓட்டுநர் உயிரிழப்பு!