இது குறித்து அவர் கூறுகையில்,
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோரை தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடும் சுதந்திரத்தை அணி நிர்வாகம் அனுமதி தர வேண்டும் என்றார்.
ரோகித் ஷர்மா, கோலி, ஷிகர் தவான், கே.எல்.ராகுல் ஆகியோர் அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தால், தோனியால் முழு சுதந்திரமாக அதிரடியாக விளையாட முடியும் எனத் தெரிவித்தார்.
நாதன் லயான் (ஆஸ்திரேலியா), மிட்சல் சான்ட்னர்(நியூசிலாந்து) ஆகியோரது சுழற்பந்துவீச்சு மிடில் ஆர்டர் ஓவரில் இந்திய அணிக்கு பிரச்னையாக இருக்குமா என்ற கேள்விக்கு,
தோனி அவரது ஆரம்பக்காலக்கட்டத்தில் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டபோது இரண்டாவது பந்திலேயே சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார். சிஎஸ்கே அணியின் வலைப்பயிற்சியின்போது, தோனி இரண்டாவது பந்திலேயே பல அதிரடி சிக்சர்களை விளாசியுள்ளதை நான் பார்த்து இருக்கிறேன். இதனால், இந்தத் தொடரிலும் அவர் சுழற்பந்து வீச்சாளர்களை ஒரு கை பார்ப்பார் என பதிலளித்தார்.
இந்திய அணியின் சிறந்த கேப்டன், விக்கெட்கீப்பர், ஃபினிஷர் என பலமுகங்களை கொண்டவர் தோனி. இம்முறை உலகக் கோப்பை தொடரில் கோலியின் கேப்டன்ஷிப் கீழ் இவர் எப்படி பேட்டிங் செய்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இப்போட்டி ஜூன் 5ஆம் தேதி சவுத்ஹாம்டன் நகரில் நடைபெறவுள்ளது.