ETV Bharat / briefs

முழு ஊரடங்கு: 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது! - Tasmac Closed In Chennai

சென்னை: முழு ஊரடங்கு காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 160 டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tasmac Do Not Working in Chennai
Tasmac Do Not Working in Chennai
author img

By

Published : Jun 16, 2020, 4:36 PM IST

கரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஜுன் 19ஆம் தேதி முதல் ஜுன் 30ஆம் தேதிவரை முழு ஊரடங்கை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கு பகுதிகள் எவை?

திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் பேரூராட்சி, பூவிருந்தவல்லி, ஈக்காடு, சோழவரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகள்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு, மறைமலைநகர் நகராட்சி, நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சி, காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட மாங்காடு, குன்றத்தூர் பேரூராட்சி, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட அய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூர், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், கோவூர், தண்டலம், தரப்பாக்கம், இரண்டாம் கட்டளை, மௌலிவாக்கம், பெரியபணிச்சேரி, நந்தம்பாக்கம், சிறுகளத்தூர், கொல்லச்சேரி, கொழுமணிவாக்கம், சிக்கராயபுரம், பூந்தண்டலம், மலையம்பாக்கம், திருமுடிவாக்கம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முழு ஊரடங்கு காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 160 டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: லாக்டவுன்: வீட்டிற்கே சென்று ரூ.1000 நிவாரணம் - முதலமைச்சர் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.