விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு அரிய வகை மூலிகைகள் எரிந்து நாசமாவதோடு விலங்குகளும் அதிகளவு பாதிக்கப்படுகின்றன. தீ விபத்து ஏற்படும் சமயத்தில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், மலைவாழ் மக்கள் ஆகியோர் சேர்ந்து மலையில் ஏற்பட்ட தீயை அணைப்பது வழக்கம்.
இந்நிலையில், "ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தமிழ்நாடு - கேரளா எல்லையில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதை தடுக்க தீ விபத்து ஏற்படும் போது தமிழ்நாடு எல்லைக்குள் தீ பரவாமல் இருப்பதற்காகவும், அதேபோல் தமிழ்நாடு எல்லையில் தீப்பிடித்து கேரள எல்லைப் பகுதிக்குள் பரவாமல் இருப்பதற்காகவும் 18 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி எல்லையில் ஃபயர் லைன் தீ தடுப்புக் கோடு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:நாட்டுக்காக உயிரை தந்திருக்கிறான் - வீரமரணமடைந்த ராணுவ வீரனின் தந்தை உருக்கம்!