இந்தியா - சீன எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து, சீன நாட்டைக் கண்டித்து, நாடு முழுவதும் பலர் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சீனத் தயாரிப்புகளை இனி புறக்கணிக்கப் போவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தெரிவித்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேச நலன் கருதி சீனாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் உயிர் நீத்து வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இனி நமது வணிகர்கள் யாரும் சீனப் பொருள்களை வாங்கி விற்பதை முழுமையாகத் தவிர்த்து, நமது இந்தியத் தயாரிப்புகளை ஊக்கப்படுத்துவோம்.
இந்தியப் பொருள்களை சந்தைப்படுத்துவோம் என்ற கோஷத்தோடு தேச நலனை முன்னிறுத்தி, அனைத்து வணிகர்களும் சீனத் தயாரிப்புகளை புறக்கணிக்க ஓர் அணியில் திரண்டு சூளுரை ஏற்போம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சீனப் பொருள்களை புறக்கணிப்போம் - வர்த்தக் கூட்டமைப்பு போர்க்கொடி