நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு புதிய வேளாண்மை சட்டத்தை நிறைவேற்றியது. இதை நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் எதிர்த்துவருகின்றன.
அந்த வகையில், கரூர் மாவட்ட தமிழ்ப் புலிகள் கட்சி சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் ரமேஷ் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர், வேளாண்மை சட்டத்திருத்த மசோதா நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, எரிக்கப்பட்ட நகலை காவல் துறையினர் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.