இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில தலைவர் அப்துல் இம்ரான் கூறுகையில், “வெளிநாடுகளில் இருக்கும் தமிழ்நாடு மக்களை தாயகம் அழைத்து வருவதில் மத்திய அரசு அலட்சியம் காட்டி வருகிறது.
கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் வெளிநாடுகளில் தங்கி படிக்கும் மாணவர்கள், சுற்றுலா பயணிகள், மருத்துவத்திற்காக சென்ற நோயாளிகள், தொழிலாளர்கள் என பல்லாயிரக்கணக்கான தமிழ்நாடு மக்கள் பல மாதங்களாக தமிழ்நாடு வரமுடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.
மேலும் கம்பெனிகள் மூடப்பட்டதால் தொழிலாளர்கள் பலர் உணவில்லாமல், சாலைகளில் படுத்துறங்கும் அவல நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு தமிழ்நாடு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு வருவதற்கான அனைத்து செலவுகளையும் மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும். இதனை வலியுறுத்தி வருகின்ற திங்கள்கிழமை காலை 10.30 மணி முதல் 10.45 வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் இணையவழி போராட்டம் நடைபெறும்” என்றார்.