தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி தென்காசி மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும், ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 58லிருந்து 59ஆக உயர்த்தியதைத் திரும்பப் பெற வேண்டும்.
செவிலியர், தூய்மைப் பணியாளர்கள் என அனைத்துத் துறை அரசு ஊழியர்களுக்கும் முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான அரசு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.