கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிலவரத்தின்படி 2 ஆயிரத்து 299 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
மேலும் தொற்று பரவாமல் இருப்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே உளூந்தூர்பேட்டை பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு இன்று (ஜூலை20) காலை தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அறிவுறுத்தலின் பேரில் உளூந்தூர்பேட்டை பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் இன்று வங்கியை மூடினார்கள்.
மேலும், அடுத்துவரும் ஏழு நாள்களுக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என அறிவிப்பு செய்து அதற்கான துண்டு பிரசுரத்தை வங்கியின் முன்பாக ஓட்டியுள்ளன.
இதனால் பொதுமக்களின் வங்கி சேவை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 'சமூக வலைதளங்களில் இழிவுபடுத்துவோரை தண்டிக்க வேண்டும்' - வைகோ