சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வருபவர்கள் கங்கை கொண்டான் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, வெளி மாவட்டங்களில் இருந்து இ-பாஸ் பெற்று வருபவர்கள் இங்கே சோதிக்கப்பட்டு மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இன்று (ஆகஸ்ட் 5) கங்கைகொண்டான் சோதனைச் சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நாள்தோறும் எவ்வளவு வாகனங்கள் மாவட்டத்துக்குள் வருகின்றன, வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்களுக்கு மேற்கொள்ளப்படும் சோதனைகள் குறித்து கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து, சோதனைச் சாவடியில் பணிபுரியும் காவலர்கள், பிற அரசு ஊழியர்களுக்கு மருத்துவ உபகரணங்களை அவர் வழங்கினார்.