ETV Bharat / briefs

கரோனாவை குணப்படுத்தும் சித்த மருத்துவம் - தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்ய அரசுக்கு வேண்டுகோள்!

author img

By

Published : Jul 2, 2020, 4:57 PM IST

சென்னை : சித்த மருத்துவர் வீரபாபு தலைமையிலான கோவிட்-19 சிறப்பு சிகிச்சை குறித்த சித்த மருத்துவ முகாம்களை அதிகரிக்க வேண்டுமென தமிழ்நாடு சுகாதாரத்துறைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கரோனாவை குணப்படுத்தும் சித்த மருத்துவம் - தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்ய அரசுக்கு வேண்டுகோள்!
கரோனாவை குணப்படுத்தும் சித்த மருத்துவம் - தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்ய அரசுக்கு வேண்டுகோள்!

உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 இந்தியாவில் மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. அதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. கரோனா வைரஸ் (தீநுண்மி) நோய்த்தொற்றுக்கான மருந்து இதுநாள்வரை கண்டுபிடிக்கப்படாத நிலையே நீடித்துவருகிறது.

இந்நிலையில், கோவிட்-19 நோயாளிகளை தமிழர்களின் மரபு மருத்துவமான சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமென கூறி தமிழ்நாடு அரசின் அனுமதியுடன் டாக்டர் வீரபாபு தலைமையிலான சித்த மருத்துவக் குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவஹர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிறப்பு மருத்துவமனைக்கு வரும் அனைவரையும் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து மருத்துவர் வீரபாபு கூறுகையில், "ஜூன் 3ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தல் படி இந்த சித்த மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. இந்த சித்த மருத்துவ முகாமில் இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று, குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 750க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பிற மருத்துவங்களை பயன்படுத்தாமல், சித்த மருத்துவ முறைகளை மட்டுமே கொண்டு கரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு மிகுந்த கவனத்துடன் மக்கள் நலன் சிந்தனையோடு கரோனாவை கையாண்டு கொண்டிருக்கிறது" என்றார்.

இத்தனைக்கும் வயது முதிர்ந்தோர், சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் உள்பட பலரும் தொற்று பாதிப்புகளுடன் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாலும் இதுவரை ஒரு உயிரிழப்புகள் கூட பதிவாகவில்லை.

சமூக ஆர்வலர் தமிழ்பாலன் கூறுகையில், "ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சைப் பெறுவோர் அனுமதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைகளில் தினம்தோறும் சிகிச்சைப் பலனின்றி இறப்பவர்கள் விகிதம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனவே, தமிழ்நாடு முழுவதும் சித்த மருத்துவக் குழுவைனரின் குழுக்களை அமைத்து, அதிக எண்ணிக்கையில் சித்த மருத்துவ முகாம்களை அமைக்க தமிழ்நாடு சுகாதாரத்துறை நடவடிக்கைகள் மேற்கொண்டால் உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்" என கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக கரோனா தொற்று தடுப்பு சிறப்பு அலுவலரும், சுகாதாரத்துறை செயலருமான டாக்டர். ராதாகிருஷ்ணன் கூறுகையில், "அதிக மூச்சுத் திணறல் உள்ள நோயாளிகள் சித்த மருத்துவ முகாமிற்கு அனுப்பப்படுவதில்லை. இருப்பினும், பிற தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவர் வீரபாபு தலைமையிலான குழுவினர் நல்ல சிகிச்சை வழங்கி வருவது ஆரோக்கியமானது. அதேபோல், தாம்பரம் சித்த மருத்துவ மையம் உள்ளிட்ட பல்வேறு கோவிட்-19 சிகிச்சை மையங்களையும் வீரபாபு தலைமையிலான சித்த மருத்துவ முகாமையும் மேம்படுத்த அரசு சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.