அரியலூர் மாவட்டத்தில் 26 ஏக்கர் பரப்பளவில், சுமார் 347 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்ட வேலைகள் நடைபெற்றுவருகின்றன. இதில் 150 மாணவர்கள் படிக்கும் வண்ணம், 700 படுக்கைகள் கொண்ட வசதி அமைக்கப்பட உள்ளது.
இங்கு அலுவலகக் கட்டடங்கள், குடியிருப்புக் கட்டடங்கள், கட்டும் இடத்தை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் ஆய்வுமேற்கொண்டார்.
மேலும் 2021-22ஆம் ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதால் பணிகளைத் தரமாகவும் விரைவாகவும் கட்டி முடிக்க அவர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இம்மருத்துவமனை கட்டப்படுவது மூலம் மேல் சிகிச்சைக்காக திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்குப் பொதுமக்கள் செல்லாமல் அரியலூர் மாவட்டத்திலேயே சிகிச்சைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தாமரை ராஜேந்திரன் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா, வருவாய்த் துறை அலுவலர்கள், பொதுப்பணித் துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.