திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த்திடம் இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ”அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் சுழற்சி முறையை (ஷிப்ட்) ரத்துசெய்யும் முடிவை திரும்பப் பெற வேண்டும். ஊரடங்கு பிரச்சனை முடிவதற்குள் தனியார் பள்ளிகள் கட்டணங்கள் வசூலிப்பதைத் தடுத்துநிறுத்த வேண்டும்.
இணையதள வசதி மாணவர்களுக்கு முழுமையாகக் கிடைக்கப்பெற்ற பிறகே இணையத்தில் பாடம் நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும். பள்ளியில் கற்பது மற்றும் கற்பித்தல் குறித்தான தமிழ்நாடு அரசின் ஆய்வுக்குழுவில் மாணவர்கள், கல்வியாளர்கள், மாணவ அமைப்பு பிரதிநிதிகளை இணைத்திட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.