ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி ஒருவரை, அவர் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நிரஞ்சன் குமார் (30) என்பவர் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதையடுத்து, சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறவே, அவர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நிரஞ்சன் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.