ETV Bharat / briefs

கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை தடை செய்யக் கோரும் சேவா பாரதி அமைப்பு!

author img

By

Published : Jul 9, 2020, 11:46 PM IST

சென்னை : சமூக வலைதளங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சேவாபாரதி அமைப்பை பற்றி தவறான கருத்துகளை பரப்பிய கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை தடைச் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை தடை செய்ய கோரும் சேவா பாரதி அமைப்பு!

இது தொடர்பாக சேவாபாரதி அமைப்பின் சென்னை மாவட்ட தலைவர் கணேஷ் காந்தி என்பவர் எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை வழக்கில் தொடர்புடைய காவலர்கள் அனைவரையும் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த வழக்கில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸுக்கு தொடர்பு உள்ளது எனக் கூறி தடையும் செய்துள்ளனர். இந்த நிலையில் கருப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலில் தமிழ்நாடு முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பணியில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சேவா பாரதி அமைப்பை சேர்ந்தவர்கள் மட்டுமே இருப்பதாக கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இது போன்ற தவறான கருத்துகளை கூறிவரும் கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் மீது வழக்குப்பதிவு செய்து, அதனை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும்" என அதில் தெரிவித்துள்ளார்.

சாதி, மதம், மொழி, இனம், பாலினம் அடிப்படையிலான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சிந்தனை கொண்ட சமூக இணையதள யுகத்தின் சில இளைஞர்கள் ஒருங்கிணைந்தே கருப்பர் கூட்டம் எனும் யூ டியூப் சேனலை நடத்திவருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.